கார் ஒன்றில் ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் சென்று கொண்டிருந்த இரண்டு பேர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு - கட்டுநாயக்க வீதியில் கட்டுநாயக்க நோக்கி சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போது ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
இதன்போதி 100 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் லொன்சினா மற்றும் கரதரயா என்று அறியப்படும் நீர்கொழும்பு மற்றும் மினுவாங்கொட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது
Reviewed by NEWS
on
February 14, 2019
Rating:
