இந்தியா விமானி அபிநந்தன் நாளை விடுப்பு - பாகிஸ்தான் பிரதமர்

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

அமைதியின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு துறையினர் சுட்டு வீழ்த்தியிருந்ததுடன் குறித்த விமானத்தின் விமானி விங் கமாண்டர் அபிநந்தனை கைது செய்திருந்தனர்.

அதேவேளை பாகிஸ்தான் இராணுவத்தினர் தன்னுடன் நல்ல முறையில் நடந்துகொண்ட விதம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள விமானி அபிநந்தன் தெரிவித்துள்ள கருத்துக்கள் அடங்கிய காணொளி தற்போது வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(அ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...