ஞானசாரவின் வழக்கு ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு

பொலன்னறுவை பிரதேசத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து இனவாதத்தினை தூண்டும் நோக்கில் கருத்துக்களை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பிலான வழக்கினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05ம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று(25) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று(25) சிறைச்சாலை ஊடாக நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஞானசாரவின் வழக்கு ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு ஞானசாரவின் வழக்கு ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு Reviewed by NEWS on February 25, 2019 Rating: 5