உதுமாலெப்பையின் அதிரடி அறிவிப்பு வெளியானது : ரிசாதுடன் அதாவுல்லாஹ்வுக்கு தனிப்பட்ட கோபம்

தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் மற்றும் உயர் பீட உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்திருந்த கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அக்கட்சியின் அங்கத்துவத்திலிருந்தும் நீங்கிக்கொள்ளும் வகையிலான இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் ஏ.எல். அதாஉல்லாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.

தேசிய காங்கிரஸ் கட்சியின் அங்கத்துவத்திலிருந்து இராஜினாமா செய்துள்ள விடயம் பற்றி ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று(20) இரவு அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள அவரது பணிமனை வளாகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

கட்சிக்குள் ஏற்பட்டிருந்த முறன்பாடுகள் காரணமாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அவர் தேசிய காங்கிரஸில் வகித்து வந்த பிரதித் தலைவர் பதவி மற்றும் உயர் பீட உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்திருந்தார்.

புதன் கிழமை(20) முதல் தேசிய காங்கிரஸ் கட்சியின் பெயரில் மேற்கொள்ளப்பட்ட சகல நடவடிக்கையிலிருந்தும் தான் விலகிக் கொள்வதாகவும் இது விடயமான இராஜினாமா கடிதத்தில், கட்சியின் பேரில் தனக்கு ஏற்படுத்தப்பட்ட அபயகீர்த்தி, தலைமைத்துவத்தின் தவறான போக்குகள் பற்றிய 19 பக்கங்களைக் கொண்ட கடிதத்தினை அக்கட்சியின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறினார். 

கட்சிக்குள் கூலிக்கு அமர்த்தப்பட்ட ஒரு குழுவை வைத்துக் கொண்டு கட்சியின் முக்கியஸ்தர்களையும், உயர் பதிவிகளில் இருந்தவர்களையும் சமூகவலைத்தளங்களில் தாக்குவதும், இழிவு படுத்துவதும், கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவதுமாக இருந்து வந்ததை கண்டு கொள்ளாத தலைமைத்துவம், கடந்த பிரதேச சபைத் தேர்தலில் அட்டாளைச்சேனை உள்ளுராட்சி சபையை தேசிய காங்கிரஸ் கைப்பற்றக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்து வந்தது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமைத்துவத்துடன் ஏற்பட்டுள்ள தனிப்பட்ட கோபம் காரணமான முஸ்லிம் கூட்டமைப்புக்கு தொடர்ச்சியாக தேசிய காங்கிரஸின் தலைமைத்துவம் தடையாகவும் இருந்து வந்தது.

இவ்வாறான தவறுகளையும், கட்சிக்குள் இருந்து வந்த குழப்பங்களையும் சுட்டிக் காட்ட முனைந்த போது கட்சிக்குள் இருக்கும் கறுப்பாடுகள் என்மீது வீண் பலியை சுமத்தி எனது அரசியல் பயணத்துக்கும், தலைமைக்கும் இடையில் அபயகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சியில் தொடராக இருந்து வந்தது.

இவ்வாறான நிலையில், கட்சியின் தலைமைத்துவம் அறிந்துகொள்ளும் வகையில் பிரச்சினைகளை எடுத்துக் கூறியிருந்தேன். பின்னர் கட்சியில் வகித்த பதவிகளை இராஜினாமா செய்தேன். இந்நிலையில் தலைமைத்துவம் எனது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்காத நிலையில் நான் 30 கோடி ரூபா பணம் பெற்றுவிட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணையப் போவதாகவும் கதைகளை கிழப்பியிருந்தார்கள்.

இவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையிலேயே தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து முற்றாக நீங்கும் இராஜினாமா கடிதத்தை அதன் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் எனது அரசியல் பயணம் தற்போது சுதந்தி;ரமாக செல்லவுள்ளதுடன் வரும் காலங்களில் எனது ஆதரவாளர்களினதும், ஊர் முக்கயஸ்தர்களுடனும் கலந்துரையாடி ஒரு தீர்க்கமான அரசியல் பயணத்தை முன்னெடுக்கவுள்ளேன் என்றார்.

ரீ.கே. ரஹ்மதுல்லாஹ்உதுமாலெப்பையின் அதிரடி அறிவிப்பு வெளியானது : ரிசாதுடன் அதாவுல்லாஹ்வுக்கு தனிப்பட்ட கோபம் உதுமாலெப்பையின் அதிரடி அறிவிப்பு வெளியானது : ரிசாதுடன் அதாவுல்லாஹ்வுக்கு தனிப்பட்ட கோபம் Reviewed by Ceylon Muslim on February 21, 2019 Rating: 5