தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 4, 2019

ஞானசார தேரருக்கு இன்று விடுதலை இல்லை?

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் விசேட மன்னிப்பின் கீழ் விடுலை செய்யப்படும் கைதிகள் தொடர்பான சுற்று நிருபம் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று (03)  மாலை வரையில் தேரரின் விடுதலை தொடர்பில் எந்த அறிவித்தலும் கிடைக்கப் பெறவில்லையென திணைக்கள வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதன்படி, தேரருக்கு இன்றைய தினம் விடுதலை வழங்கப்பட மாட்டாது எனவும் சிறைச்சாலை வட்டாரங்களை ஆதாரம் காட்டி தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Post Top Ad

Your Ad Spot

Pages