சாய்ந்தமருது இறுதிப்புரட்சி: கொழும்பில் சற்றுமுன் கூடியது உயர்மட்டக் கலந்துரையாடல்

சிலோன் முஸ்லிம் செய்தியாளர்

உயர்மட்டக்கூட்டத்தின் பின் ; அமைச்சர்களான வஜிர அபேவர்த்தன, ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதியுதீன் ஆகியோர் நேரலையில் பேசியவை : சாய்ந்தமருது பிரதேசங்களுக்கான தனியான உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதற்கான கோரிக்கை கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக உயர்மட்டக்கலந்துரையாடல் சற்றுமுன் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் கொழும்பில் ஆரம்பமானது 

இவ் உயர்மட்டக்கலந்துரையாடலின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ்,  அப்துல்லாஹ் மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர்களான வீ.சி. இஸ்மாயில், நசீர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். 


மேலும்,  சாய்ந்தமருது பள்ளிவாசல் சபை நிருவாகம் அறிவித்துள்ள இறுதிகட்ட போராட்டத்தை அடுத்து இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்.
Sainthamaruthu | Rishad  and Hakeem 

சாய்ந்தமருது பிரதேச சபைக்கான கோரிக்கை பாரிய அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள இந்த தருணத்தில் இன்று மாலை ஆரம்பமாகிய கூட்டம் முக்கியமான முடிவை எடுப்பதற்கான ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 


பின்னிணைப்பு:


  • உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன இதுவரை கலந்துகொள்ளவில்லை
  • நேரம் 5.45 கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 
  • ஊடகவியலாளர்கள் வெளியில் படையெடுப்பு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்