சாய்ந்தமருது உள்ளூராட்சி விவகாரம் : இன்று கூடுகிறது உயர்மட்டம்

கல்முனை மாநகர சபையின் கீழுள்ள சாய்ந்தமருது மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கான தனியான உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதற்கான கோரிக்கை கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான தீர்வை விரைவாக பெற்றுத்தர வேண்டுமென சாய்ந்தமருது பள்ளிவாசல் சமூகம் உள்ளிட்ட கல்முனையின் ஏனைய பிரதேசங்களிலுள்ள பொது அமைப்புகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை மேற்கொண்டுவருகின்றன.இதுதொடர்பாக உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன இராஜாங்க அமைச்சர் ஹரீசுடன் கலந்தாலோசித்து தீர்மானித்தமைக்கு அமைவாக சாய்ந்தமருது மற்றும் கல்முனையின் ஏனைய பிரதேசங்களுக்கான உள்ளூராட்சி மன்ற விவகாரம் தொடர்பில் தீர்வை எட்டுவது சம்பந்தமான உயர் மட்ட கூட்டம் ஒன்றை இன்று மாலை 4 மணிக்கு நடத்துவதற்கு அமைச்சர் வஜிர அபேவர்த்தன நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றார். இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...