Mar 7, 2019

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு 14 ஆயிரம் வீடுகள் : மோடி

சென்னை, சாஹுல் ஹமீட் 

காஞ்சிபுரத்தின் கிளாம்பாக்கத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய ஆட்சியில் 19,000 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து மீட்கப்பட்டனர். மேலும், இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு 14000 வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பா.ஜ.க. தலைமையிலான மத்திய ஆட்சியில் 19,000 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து மீட்கப்பட்டனர். மேலும், இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு 14000 வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழர்களுக்கு எங்கே பிரச்சினை என்றாலும் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசுதான்.யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நான் பெற்றுள்ளேன். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு மத்திய அரசு சார்பில் 14 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும். ரயில் மற்றும் நெடுஞ்சாலை திட்டங்கள் நகரங்களை இணைத்து, பயண நேரங்களை குறைக்கும்.

இந்தியாவை பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி முனையமாக்குவது எங்கள் நோக்கம். தமிழகத்தில் அமையும் பாதுகாப்பு தொழில்பூங்கா தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும்.தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 66 நாடுகளுடன் இ-விசா வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மோடியை வசைபாடுவதில் எதிர்க்கட்சிகளுக்கு இடையே போட்டி. என்னை சிலர் திட்டுகிறார்கள். சிலர் என் ஏழ்மையை திட்டுகிறார்கள். சிலர் என் குடும்பத்தை வசைபாடுகிறார்கள். சிலர் என்னை கொல்ல கூட நினைக்கிறார்கள். பரவாயில்லை, நான் மக்களுக்காக வாழ்கிறேன். மக்களுக்காக நான் ரத்தம் சிந்த தயார். மக்களுக்காக நான் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். மக்களின் நலனே எங்களுக்கு முக்கியம்.

நாட்டின் முடிவுகள் டெல்லியில் எடுக்கப்படுவதில்லை. நாட்டு மக்களே உச்சபட்ச கமாண்டர்கள். நாட்டின் பாதுகாப்பில் எதிர்கட்சிகள் அலட்சியம் காட்டிவருகின்றன. வலிமையான ராணுவத்தை அவர்கள் விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் முடிவுகளை மக்கள்தான் எடுக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழக பாதிரியாரை மத்திய அரசு மீட்டு வந்தது. சவுதி இளவரசரிடம் பேசி அங்குள்ள தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பாகிஸ்தானிடம் சிக்கிய தமிழக விங் கமாண்டர் அபிநந்தன் இரண்டு நாட்களிலேயே எப்படி மீட்கப்பட்டார் என்பது உலகிற்கே தெரியும். உலகில் தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் மத்திய அரசு ஓடோடி செல்கிறது.

இந்தியாவை பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி முனையமாக்குவது எங்கள் லட்சியம். எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்காக வலிமையான நாட்டையும், ராணுவத்தையும் விரும்பவில்லை.தேசிய ஜனநாயக கூட்டணியில் முடிவுகளை மக்கள்தான் எடுக்கிறார்கள். காங்கிரசால் மாநில நலன்களைப் பூர்த்தி செய்யமுடியாது. ஏனென்றால் அவர்களுக்கு குடும்பமே முக்கியம்.காங்கிரஸ் வலிமை மிக்க மாநில தலைவர்களை அவமானப்படுத்துகிறது. காங்கிரசால் காமாராஜர் எப்படி அவமானப்படுத்தப்பட்டார் என்பதை தமிழகம் மறக்காது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அரசை கலைத்தது காங்கிரஸ் கட்சிதான். அரசியலுக்காக மாநில அரசை கலைத்ததும் காங்கிரஸ்.

ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும், மூச்சையும் 130 கோடி மக்களுக்காக செலவிட விரும்புகிறேன். ஊழல்களை களைவதில் எந்த சமரசமும் கிடையாது.எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கலப்பட கூட்டணியிடம் அவர்களது தலைமை யார்? அவர்களது நோக்கம் என்ன? திட்டம் என்ன? என்பதை மக்கள் கேட்க வேண்டும்.


உங்களுடைய கனவுகளை நனவாக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாய்ப்பு கொடுங்கள். நாளை நமதே... நாற்பதும் நமதே என தெரிவித்துள்ளார். வடஇந்தியாவின் காசி பகுதிக்குட்பட்ட வாரணாசி தொகுதி எம்பியான நான் தமிழக மக்களை சந்திக்க காஞ்சி நகருக்கு வந்துள்ளேன். உலகின் மிகவும் அழகிய தொன்மை வாய்ந்த மொழியினால் நமக்கு பெருமை.நம் நாட்டில் உள்ள நகரங்களில் மிகவும் சிறந்தது காஞ்சி நகரம் என கவி காளிதாஸ் கூறியுள்ளார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பல்வேறு கனவு திட்டங்களை எங்கள் அரசு நிறைவேற்றி வைத்துள்ளது. இதில் சில திட்டங்களுக்கு இன்று நான் இங்கே அடிக்கல் நாட்டியுள்ளேன்.

சென்னையில் எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்துள்ளேன். எம்.ஜி.ஆர். என்னும் மாமனிதர் இந்த சினிமாவில் மட்டுமல்ல, மக்கள் இதயங்களிலும் நீங்காத முக்கிய சிறப்பிடத்தை பிடித்தவர்.ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தனது ஆட்சியின் மூலம் அவர் நிறைவேற்றி வைத்தார்.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும். சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் மற்றும் பிற இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் இனி அறிவிப்புகள் தமிழிலும் தெரிவிக்கப்படும் என்னும் இரு மகிழ்ச்சியான அறிவிப்புகளை இன்றைய நாளில் தமிழக மக்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network