காத்தான்குடியில் 20ம் திகதி, உத்தேச அரசியல் யாப்பு விழிப்புணர்வு கூட்டம்

காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் வர்த்தகர் சம்மேளத்துடனான குரல்கள் இயக்கத்தின் இரண்டாவது சந்திப்பு சென்ற வியாழன்(28) இரவு சம்மேளன அலுவலகத்தில் இடம் பெற்றது.

உத்தேச அரசியல் யாப்பு விழிப்புணர்வுக் கூட்டங்களை குரல்கள் பல பிரதேசங்களிலும் நடாத்திக் கொண்டுவருகிறது.அந்த வரிசையில் காத்தான்குடியில் உத்தேச அரசியல் யாப்பு விழிப்புணர்வுக் கூட்டத்தை சம்மேளத்துடன் இணைந்து நடாத்துவதற்கான வழி முறைகள்,ஏற்பாடுகள் சம்பந்தமான விடயங்கள் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

குரல்கள் இயக்கத்தின் சார்பாக சட்டத்தரணிகள் Muhaimin khalid Hassan Rushdhy Radheef Ahamed Sajith Klm ஆகியோர் கலந்து கொண்டனர்.சம்மேளத்தின் சார்பாக சம்மேள உறுப்பினர்கள் பலர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

காத்தான்குடிக்கான உத்தேச அரசியல் யாப்பு விழிப்புணர்வு கூட்டத்தை எதிர்வரும் 20ம் திகதி காத்தான்குடியில் சம்மேளனத்துடன் இணைந்து நடாத்துவதாக குறிப்பிட்ட கலந்துரையாடலில் முடிவுகள் எட்டப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்