ஆனமடுவ, இஹல உஸ்வெவ பிரதேசத்தில் நேற்று (28) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலி.ஆனமடுவ, இஹல உஸ்வெவ பிரதேசத்தில் நேற்று (28) இடம்பெற்ற வீதி விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இஹல உஸ்வெவ, மஹ உஸ்வெவ பகுதியைச் சேர்ந்த ரத்னாயக்க முதியன்சலாகே ஆரியதாச ரத்னாயக்க (வயது 45) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மஹ உஸ்வெவ பகுதியில் இருந்து பலுகொல்ல பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன், அதே திசையை நோக்கி பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் ஒன்று பின்னால் சென்று மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, விபத்துக்குள்ளான இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஒன்றில், பின்னால் இருந்து பயணித்த நபர் ஒருவர் பாடுகாயமடைந்த நிலையில் ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், மேலதிக சிகிச்சைக்காக நிகவெரட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்