தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 19, 2019

ACMCயிலிருந்து SLMCக்கு தாவினார் ஹில்மி மஹ்ரூப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து ஹில்மி மஹ்ரூப் உத்தியோகபூர்வமாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துக் கொண்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தெளபீக் தலைமையின் கீழ் இன்று இணைந்துக் கொண்டுள்ளார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம்மின் இல்லத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது முன்னாள் கிழக்கு மாகாண சபைத் தவிசாளர், சட்டத்தரணி பாயிஸ் கலந்து கொண்டுள்ளார்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஹில்மி மஹ்ரூப் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Your Ad Spot

Pages