இலங்கை, சர்வதேச நீதியை நிலைநாட்டுவதற்கு ஒப்பந்தப்பட்டுள்ளதாக, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

அதில் ஒன்றே மனித உரிமையை காப்பாற்றுவது என, சூரியனின் செய்தி பிரிவுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் குறிப்பிட்டார்.

மீண்டும் போர் ஒன்று வராதிருப்பதற்கு, அடிப்படை காரணிகளை தேடி ஆராய வேண்டும் எனவும் வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.

இதேவேளை, அபிவிருத்தி பணிகள் தொடர்பில் கருத்து தெரிவித்த வடமாகாண ஆளுனர், யாழ்ப்பாணத்தில் கடந்த பல வருடங்களாக நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான நான்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Share The News

Post A Comment: