வில்பத்து வனத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பாரியளவிலான காடழிப்பு செயற்பாடு குறித்து, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், தொடர்ந்து இக் காடழிப்பு செயற்பாடு இடம்பெற்று பாரிய அழிவு இடம்பெறுவதற்கு முன்னர், ஜனாதிபதி இந்த விடயத்தில் தலையிட வேண்டுமென, அவர் தனது டிவிட்டர் பதிவில் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

இப் பிரச்சினை சூழல் பிரச்சினையாக மாத்திரமன்றி, ஒரு சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதால், அரசாங்கம் இந்த விடயத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டுமென, நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Share The News

Post A Comment: