சவூதி நலன்புரி நிலையங்களில் இலங்கை பணியாளர்கள் நன்றாக நடத்தப்படுகின்றனர்!


Related imageதொழில் நிமித்தம் சவூதி அரே­பி­யா­விற்குச் சென்று பிரச்­சி­னைகள் கார­ண­மாக நலன்­புரி நிலை­யங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்ள இலங்­கை­யர்கள் சிறந்த முறையில் நடத்­தப்­ப­டு­வ­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு, விளை­யாட்­டுத்­துறை அமைச்சின் கண்­கா­ணிப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹெக்டர் அப்­பு­ஹாமி தெரி­வித்தார். குறித்த நிலை­யங்­களில் அவர்­க­ளுக்குத் தேவை­யான வச­திகள் செய்து கொடுக்­கப்­ப­ட­வில்­லை­யென சில ஊட­கங்கள் முன்­வைத்த குற்­றச்­சாட்­டையும் அவர் மறுத்தார்.

வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்­ட­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நலன்­புரி நிலை­யங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்குத் தேவை­யான வச­திகள் செய்து கொடுக்­கப்­ப­ட­வில்லை என சில ஊட­கங்கள் அண்­மையில் குற்­றம்­சாட்­டி­யி­ருந்­தன. அது­கு­றித்து ஆராய்­வ­தற்கு வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தின் இரு அதி­கா­ரிகள் உள்­ள­டங்­க­லாக நானும் அண்­மையில் சவூதி அரே­பியா சென்று அந்த நிலை­யங்­களை ஆராய்ந்தோம். இலங்­கை­யி­லி­ருந்து பணிப்­பெண்­க­ளாகச் சென்று சில பிரச்­சி­னைகள் கார­ண­மாக தொழில் செய்த இடங்­க­ளி­லி­ருந்து வெளி­யே­றி­ய­வர்கள் பெண் நலன்­புரி நிலையம் மற்றும் பாது­காப்பு இல்லம் (Safe House) என்­ப­வற்றில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

அந்த நிலை­யங்­களில் அவர்­க­ளுக்குத் தேவை­யான சகல வச­தி­களும் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளன. வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சு, தொழில் அமைச்சு, சுங்கத் திணைக்­களம், மனித உரி­மைகள் காரி­யா­லயம் ஆகி­ய­வற்றின் கிளைகள் உட்­பட பொலிஸ் நிலை­யமும் அந்த நிலை­யங்­களில் இயங்கி வரு­கின்­றன. இதற்­காக சவூதி அர­சாங்கம் பெரு­ம­ளவு நிதியைச் செல­வி­டு­கி­றது.

எனவே, தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் தமக்கு பிரச்­சி­னைகள் ஏதும் ஏற்­ப­டு­மாயின் அந்தக் காரி­யா­ல­யங்­களில் முறை­யி­டலாம். அத்­துடன் நிலை­யங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களை உள­வியல் ரீதியில் ஒரு­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத் திட்­டங்­களும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

சுற்­றுலா விசா மூலம் சவூதி அரே­பி­யா­விற்குச் சென்­ற­வர்­களே அதி­க­ளவில் பிரச்­சி­னை­க­ளுக்கு முகம்­கொ­டுக்­கின்­றனர். மேலும் திருட்­டுத்­த­ன­மான முக­வர்­க­ளூ­டாக எவரும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்குச் செல்ல முற்­ப­டக்­கூ­டாது.

இதே­வேளை, வெளி­நாட்டு வேலை­வாய்ப்­பு­க­ளுக்குச் செல்­வோ­ருக்கு வழங்கும் பயிற்சி நெறியில் சிறி­ய­ளவில் திருத்தம் கொண்டு வரு­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்ளோம். அத்­துடன் இலங்கை மற்றும் சவூதி அரே­பியா ஆகிய நாடு­க­ளுக்­கி­டையில் பாரா­ளு­மன்ற நட்­பு­றவுச் சங்கம் அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வுள்ளோம். இது குறித்து சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நட்புறவுச் சங்கத்தின் மூலம் சவூதி அரேபியாவை இலங்கையில் முதலீடு செய்யச் செய்து நாட்டில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளோம். சுற்றுலாத்துறையையும் இதன் மூலம் அபிவிருத்தியடையச் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்