பொலிஸ் அதிகாரியை மோதிச் சென்ற நபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

NEWS
0 minute read
பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

டிபென்டர் வாகனத்தை செலுத்திய ஓட்டுனரான நவிந்து ரத்னாயக்க என்பவரையே இவ்வாறு ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் அதில் ஏழு பேர், இரண்டு 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். 

அத்துடன் விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
To Top