அர்ஜுன மஹேந்திரனை இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு இலங்கை பொலிசாருக்கு தேவையான தகவல்களை வழங்கியுள்ளதுடன் இரண்டு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். 

அத்துடன் இதற்காக "இன்டர்போல்" சர்வதேச பொலிஸ் உதவியையும் நாம் நாடியுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதை குறிப்பிட்டார்.

Share The News

Post A Comment: