தூபி மேல் ஏறிய இரு முஸ்லிம் மாணவர்களும் சற்றுமுன் விடுதலை

என்.எம்.அமீன் 

மிஹிந்­தலை பிர­தே­சத்தில் பௌத்த புரா­தன சின்­னங்கள் மீது ஏறி படம்­பி­டித்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட மூதூரைச் சேர்ந்த இரு மாண­வர்கள் தொடர்­பான வழக்கு இன்­றைய தினம் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்டு போது அவர்கள் சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

எமது வேண்டுகோளின் பேரில் விடுதலையை துரிதப்படுத் துவதற்கு உதவிய வீடமைப்பு கலாசார அமைச்சின் செயலாளர் பேர்னாட் வசந்தவுக்கு சமுகத்தின் நன்றிகள்.

விடுதலைக்கு தேவையான ஆவனங்களை பெறுவதற்கு அவர் உதவியதாலே மாணவர்களை இன்று விடுவிக்க முடிந்துள்ளது. செயலாளருடன் தொடர்பினை ஏற்படுத்தித் தந்த முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாகிர் மாகருக்கும் ஆவனத்தை துரிதமாக அனுப்பி வைக்க உதவியஆளுனர் ஆசாத் சாலிக்கும் நன்றிகள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...