நாட்டில் இடம்பெற்றுவரும் அரசியல் குழப்பத்துக்கு ஜனாதிபதியே காரணமாகும் - பொன்சேகா

நாட்டில் இடம்பெற்றுவரும் அரசியல் குழப்பத்துக்கு ஜனாதிபதியே காரணமாகும். இந்த பிரச்சினையை தொடர்ந்து கொண்டுசெல்கின்றார். அத்துடன் அரசாங்கத்தை வீழ்த்தவே ஜனாதிபதி முயற்சித்து வருகின்றார் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன் கிழமை இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

கம்பெரலிய வேலைத்திட்டத்துக்காக அரசாங்கம் 16 பில்லியனை ஒத்துக்கி இருந்தது. ஆனால் ஜனாதிபதி மேற்கொண்ட அரசியல் சதித்திட்டம் காரணமாக கிராமங்களில் மக்களுக்கு சேவை செய்ய முடியாமல்போனது. 

மேலும் அரசாங்கம் ஆரம்பிக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் வேலைத்திட்டத்தையே ஜனாதிபதி முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...