எரிபொருள் விலை நள்ளிரவு முதல் உயர்வு?

Ceylon Muslim
0 minute read
எரிபொருள் விலை திருத்தை மேற்கொள்ளும் குழு இன்று (11) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை மாற்றத்திற்கு அமைய இந்நாட்டில் எரிபொருள் விலை, விலை சூத்திரத்தின் ஊடாக மாற்றம் அடையும். அதனடிப்படையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எவ்வாறாயினும் கடந்த பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

இறுதியாக கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
To Top