மாலைதீவுக்கு ஓடமுயன்ற, கஞ்சிபான இம்ரான் ....


பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மொஹமட் நஜீம் இம்ரான் எனும் கஞ்சிப்பான இம்ரான் டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இன்று -28- காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டார். 

கஞ்சிப்பான இம்ரான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைத்தீவு நோக்கி செல்ல இருந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் கிடைக்கப்பட்ட தகவலுக்கு அமைய கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கஞ்சிப்பான இம்ரான் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து அவரிடம் தற்சமயம் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

பிரபல பாதாள உலக குழு தலைவர் மாக்கந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேரா மற்றும் சிறைச்சாலை அதிகாரியான கோதாகொட ஆரச்சிகே லலித் குமார ஆகிய இருவரும் நேற்று டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...