கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நாளை நீர் வெட்டு.கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நாளை நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது. 

நாளை காலை 09.00 மணிமுதல் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. 

அதன்படி கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. 

அதேநேரம் குறித்த காலப் பகுதியில் கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக அந்த சபை அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...