இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் பதவி விலக தயாராகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி எச்.எம்.எம்.ஹரிஸ் பதவியேற்றிருந்தார்.

இராஜாங்க அமைச்சராக பதவியேற்று இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னர் இவர் அரசாங்க தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் உருவாக்கம் மற்றும் கரையோர மாவட்டம்  போன்ற விடயங்கள் உள்வாங்கிyஅ இந்த முடிவு எடுக்கவுள்ளதாகவும் அதற்கான தீர்வுகள் எட்டப்படாத சந்தர்ப்பதில்  இம்முடிவை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. 

Share The News

Post A Comment: