கிண்­ணியாவில் கிரீஸ் மனி­தர்­க­ள்...!

கிண்­ணியா பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தி­களில் கடந்த ஒரு மாத கால­மாக இடம் பெற்று வரும் இரவு நேர திருட்டுச் சம்­ப­வங்­க­ளோடு தொடர்­பு­பட்­ட­வர்கள் கிரீஸ் மனி­தர்­க­ளாக இருக்­கலாம் என்ற சந்­தேகம் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக பொது மக்கள் அச்சம் தெரி­விக்­கின்­றனர். கடந்த ஒரு மாத கால­மாக பெரி­யாற்­று­முனை, கட்­டை­யாறு, மாலிந்­துறை, றஹ்­மா­னியா நகர் மற்றும் அடப்­பனார் வயல் ஆகிய பிர­தே­சங்­களில் உள்ள 25 ற்கும் மேற்­பட்ட வீடு­களில் ஓட்டைக் கழற்றி வீட்­டுக்குள் இந்த மர்ம மனி­தர்கள் இறங்­கி­யி­ருக்­கி­றர்கள். இது குறித்து பொலிஸில் முறைப்­பா­டு­களும் செய்­யப்­பட்­டுள்­ளன.

இவ்­வாறு வீட்­டுக்குள் இறங்கும் இந்த நபர்கள் பணத்தை மாத்­தி­ரமே எடுத்துச் செல்­வ­தா­கவும் சில இடங்­களில் ஓட்டைக் கழற்றி விட்டு, அருகில் உள்ள இன்­னு­மொரு வீட்­டுக்குச் சென்று அங்­கேயும் ஓட்டைக் கழற்றி விட்டுச் செல்­வ­தா­கவும் பொது மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

நேற்­று­முன்­தினம் இரவு மாத்­திரம் பெரி­யாற்­று­முனை பிர­தே­சத்தில் உள்ள மூன்று ஆசி­ரி­யர்­களின் வீடு­க­ளுக்குள் இறங்கி, அங்கு பதற்ற நிலை ஒன்றை ஏற்­ப­டுத்­தி­விட்டு தப்பிச் சென்­றி­ருக்­கி­றார்கள்.

இந்த விடயம் தொடர்ந்து ஒவ்­வொரு இரவும் நடை­பெற்று வரு­வதால் இவர்கள் திரு­டர்­க­ளாக இருக்க முடி­யாது என்றும் இவர்கள் பதற்­றத்­தையும் அச்­சத்­தையும் ஏற்­ப­டுத்தி, சமூ­கத்தில் அமை­தியை சீர்­கு­லைக்­கின்ற கிரீஸ் மனி­தர்­க­ளா­கவும் இருக்­கலாம் என்ற சந்­தேகம் இப்­போது பொது­மக்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது .

இது குறித்து, கிண்­ணியா மஜ்லிஸ் சூராவின் தலைவர் ஏ.ஆர்.எம். பரீட் கருத்துத் தெரி­விக்­கையில்,

இந்த சம்­ப­வங்­களால் பிர­தே­சத்தில் ஓர் அச்­ச­மான சூழ்­நிலை ஒன்று உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. இவற்றைத் கட்­டுப்­ப­டுத்­து­வது சம்­பந்­த­மாக பொலி­ஸா­ருடன் பல்­வேறு கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தி வரு­கின்றோம்.

இதன் பய­னாக, இன்­றி­லி­ருந்து பெரி­யாற்­று­முனை, மாலிந்­துறை மற்றும் கட்­டை­யாறு ஆகிய பிர­தே­சங்­களில் இரவு 10.30 மணிக்குப் பின்னர் பொலிஸ் ரோந்து நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு பொலிஸார் இணக்கம் தெரி­வித்­துள்­ளனர்.

அத்­தோடு, பிர­தே­ச­வா­சி­களும் இந்த மர்ம நபர்­களைப் பிடித்து பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைப்­ப­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. 2012 ஆம் ஆண்டு நோன்பு காலத்தில் இங்கு கிரீஸ் மனிதன் என்ற போர்­வையில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட பதற்­ற­மான சூழ்­நி­லையைப் போன்­ற­தொரு அசா­தா­ரண நிலையை தோற்­று­விப்­ப­தற்­கான ஆரம்ப நிலையாக இது இருக்கலாம். ஏனெனில், இன்னும் சுமார் ஒரு மாத காலமே புனித நோன்புக்கு இருக்கின்ற படியாலும் அந்த மர்ம நபர்களின் நடவடிக்கைகளை அவதானிக்கின்ற போதும் இந்த சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...