வானிலை முன்னெச்சரிக்கைநாட்டின் சில பகுதிகளில் இன்று கடும் மழை ​பெய்யக்கூடும் என வானி​லை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி , மேல் , சப்ரகமுவ , வடமேல் , மத்திய மாகாணங்களிலும்  காலி , மாத்தறை மற்றும் பதுளை மாவட்டத்திலும் சுமார் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்தநிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் , குறித்த பகுதிகளில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானி​லை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
வானிலை முன்னெச்சரிக்கை வானிலை முன்னெச்சரிக்கை Reviewed by NEWS on March 18, 2019 Rating: 5