தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 7, 2019

வரவு- செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படு, ஆட்சி மாற்றம் நடைபெறும் - தினேஷ் குணவர்தன

மக்கள் நலன்களை முன்னிலைப்படுத்தாது வரவு செலவுத் திட்டம் நிறைவேற இடமளிக்க முடியாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரம் நிச்சயம் வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் எனவும் கூறியுள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வடக்கில் நுண்கடனூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரவு செலவு திட்டத்தின் ஊடாக தீர்வை முன்வைப்பதாக அரசாங்கம் கடந்த காலங்களில் குறிப்பிட்டது. ஆனால் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் நுண்கடன் தொடர்பில் எவ்வித உள்ளடக்கங்களும் குறிப்பிடப்படவில்லை.

நுண்கடன் பிரச்சினையினை வடக்குக்கு மாத்திரம் வரையறுக்க முடியாது . அனைத்த பிரதேசத்திலும் மக்கள் கடன் சுமைகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை செலவுகள் குறித்து எவ்வித ஏற்பாடுகளும் குறிப்பிடப்படவில்லை என்றார்.

Post Top Ad

Your Ad Spot

Pages