ஜம்மு காஷ்மீர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென இன்று (வியாழக்கிழமை) குண்டு வெடித்ததில் பலர் படுகாயமடைந்துள்ளனர்

பேருந்தில் அமர்ந்திருந்தவர்கள், பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் என பலரும் இந்த குண்டு வெடிப்பில் படுகாயமடைந்துள்ளார்கள். அதேநேரம் இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிபக்ப்பட்டுள்ளனர்.

தற்போது குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் என அப்பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் பேருந்து நிலையத்தில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பிற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Share The News

Post A Comment: