வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படுகிறது (UPDATE FULL) #SLBudget2019

2019 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் தற்போது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுகின்றது.

இணைப்பு> UPDATE > REFRESH

> 1 கம்பெரலிய அபிவிருத்தித் திட்டத்திற்கு 48,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

> 2 டயர்கள் மற்றும் ரப்பர் உற்பத்தியை அதிகரிப்பதற்காக 800 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.


> 3 இலங்கை கறுவாப்பட்டை பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. ஏற்றுமதிக்கு முன்னதாக அனைத்து பொருட்களின் தரமும் பரிசோதிக்கப்படும். கறுவாப்பாட்டை பயிற்சி நிலையத்திற்கு 75 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

> 4 டயர்கள் மற்றும் ரப்பர் உற்பத்தியை அதிகரிப்பதற்காக 800 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.

> 5 சிறு டிரக்குகள் மீது சுமத்தப்படும் வரிகள் குறைக்கப்பட வேண்டும்.

> 6 என்டர்பிரைஸ் ஶ்ரீலங்கா திட்ட அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

> 7 இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகைகள் வழங்குவதற்கு Enterprise Sri Lanka-வினை விரிவுபடுத்த வேண்டும்.

> 8 பருத்தித்துறை மற்றும் பேசாலையில் மீன்பிடி துறைமுகங்களை அமைப்பதற்கு 1300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

> 9 தோட்டத்தொழிலாளர்கள் சம்பளப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட வேண்டும்

> 10 இலங்கை கறுவாப்பட்டை பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. ஏற்றுமதிக்கு முன்னதாக அனைத்து பொருட்களின் தரமும் பரிசோதிக்கப்படும். கறுவாப்பாட்டை பயிற்சி நிலையத்திற்கு 75 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

> 11 எமது அரசாங்கக் காலம் முடிவுறுவதற்கு முன்னதாக யாழ்ப்பாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை பணிகளை நிறைவு செய்வோம்.

> 12 கழிவறை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரதான பஸ் நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் புதிய கழிவறைகள் நிர்மாணிக்கப்படும். கழிவறைகள் தனியார் துறையினரால் இயக்கப்படும்.

> 13 பல்கலைக்கழக மாணவர்களின் 50% க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால், பெண் தொழிலாளர்கள் 30% க்கும் குறைவாகவே உள்ளனர். வேலைத்தளத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 3 மாதங்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும்.

> 14 விசேட தேவையுடையவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகிறது. அது 5000 ரூபாவாக அதிகரிக்கப்படும். அதற்கென 4,320 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

> 15 சிறுநீரக நோயாளர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டத்திற்கு 1,480 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

> 16 புதிதாக மணம் முடித்தவர்களுக்கான கடன் திட்டம் : முதல் வீட்டை வாங்கும் நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு 10 மில்லியனுக்கும் அதிகமான சலுகை கடன்கள் வழங்கப்படும். 6% வட்டி விகிதம், 25 ஆண்டுகளில் செலுத்தப்பட வேண்டும். 

உத்தேச திட்டம்: போதை மருந்து தொடர்பான குற்றங்களுக்காக தண்டனையளிக்கப்பட்டவர்களுக்கு அம்பேபுஸ்ஸ மற்றும் வீரவில ஆகிய பகுதிகளில் விசேட பண்ணைகள் அமைக்கப்படும். அது சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும். 

வடக்கு, கிழக்கில் 15, 000 வீடுகள் நிர்மாணிப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் மேலும் அதிகரிப்பு..

> தேசிய ஏற்றுமதி மூலோபாயத்திற்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
>இயந்திரங்களுக்கான துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் வரி விதிப்பு 2.5% குறைக்கப்படும். 

உள்நாட்டு வருமான சட்டமூலத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. 
   பிங்கிரிய அபிவிருத்தி வலயத்திற்கு ரூபா 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
    சுற்றுலா: பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களுக்கு வௌிநாட்டு நாணய பற்றுச்சீட்டுகளுக்கு NBT நீக்கம்.      >SLTDA -இல் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மாத்திரம் 2020 ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஒன்லைன் பதிவுகளை மேற்கொள்ள முடியும். 


      >புதிய கைத்தொழில் வலையங்கள் உருவாக்கப்படும்

      > வடக்கில் முஸ்லிம்களை மீள்குடியேற்ற வளங்களை பயன்படுத்த திட்டம் 
      > பல்கலைக்கழக மாணவர்களின் 50% க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால், பெண் தொழிலாளர்கள் 30% க்கும் குறைவாகவே உள்ளனர். 

      வேலைத்தளத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலைத்தளத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

      3 மாதங்களுக்கு மகப்பேற்று விடுப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும்
      >400,000 டொலர்களுக்கும் மேல் முதலீடு செய்த தனிநபர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு குடியிருப்பு விசா 
       >க.பொ.த உயர் தரத்தில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு வௌிநாட்டில் பயில நிதியுதவி வழங்கப்படும். 
       ஆகஸ்ட்டில் இத்திட்டம் 14 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்படும். ஹார்வர்ட், ஒக்ஸ்ஃபோர்ட் மற்றும் MIT போன்ற பல்கலைக்கழகங்களுடன் தற்போது கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது. 
        >பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு ரூ. 32,000 மில்லியன்         400,000 டொலர்களுக்கும் மேல் முதலீடு செய்த வௌிநாட்டவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு குடியிருப்பு விசா 

          >உள்நாட்டு கட்டுமான நிறுவனங்களுடன் இணையாமல், வௌிநாட்டு கட்டுமான நிறுவனங்களால் உள்நாட்டில் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களைப் பெற முடியாது. 
           >SLTDA -இல் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மாத்திரம் 2020 ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஒன்லைன் பதிவுகளை மேற்கொள்ள முடியும். 

           பல்கலைக்கழக உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு 25,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

           >தமிழ் மொழி ஆசிரியர்களுக்கான பயிற்சிகளுக்கு 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

           >சுவசெரிய திட்ட அபிவிருத்திக்கு 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு (2 ஆண்டுகளுக்கு மேல்)
           தேசிய தொழில் தகுதியுடனான (NVQ) தொழிற்பயிற்சித் திட்டங்களை இலங்கை இராணுவம் நடத்தவுள்ளது.

           போகம்பரை சிறைச்சாலை பொது இடமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கென 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

            மாத்தளை - பெர்னார்ட் அலுவிஹாரே விளையாட்டரங்கும் கொலன்னாவை மல்லமராச்சி விளையாட்டுத் திடலும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. 

            >புதிய வீட்டு திட்டத்திற்கு 8 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

            பொது போக்குவரத்து சேவை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் பஸ் சேவை அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

            > விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக நிதியொதுக்கீடு


            >மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பஸ் சேவைகளுக்கு முற்கொடுப்பனவு அட்டைகள் மற்றும் GPS சேவைகள் ஆரம்பிக்கப்படும். 

            > சம்மாந்துறை நகர அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

            நகர ஈர நிலங்கள் திட்ட உருவாக்கத்திற்கு 10900 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு..

            > கொழும்பு நகரத்தை புத்துயிர் அளிக்கும் திட்டத்திற்கு 300 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு...

            > நாடளாவிய ரீதியிலான குடிநீர் அபிருத்தித்திட்டங்களுக்கு 45000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு...

            > ஜூலை முதலாம் திகதி முதல் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும். இதற்கென 40 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

            ஓய்வூதிய முரண்பாடுகளை சரி செய்ய 12 பில்லியன் ரூபா ஒதுக்கீடு. 

            > கிராம வீதி அபிவிருத்திக்கு 10 பில்லியன் நிதி ஒதுக்கீடு

            > இவ்வாண்டு ஆரம்பிக்கப்படும் இலகு ரயில் திட்டத்திற்கு 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

            >படைவீரர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படும். கமாண்டோக்களின் கொடுப்பனவு 5000 ரூபாவாக உயர்த்தப்படும். வாடகைக் கட்டணம் 100% அதிகரிக்கப்படும். சீருடை கொடுப்பனவு அதிகரிக்கப்படும். 

            >இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினை வலுப்படுத்த 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு 

            இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவை வலுப்படுத்த 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு..

            >பொதுமக்களை வலுப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்க சமுர்த்தி தவறிவிட்டது. அது அரசியலாக்கப்பட்டு விட்டது. அரசியல் கூட்டாளிகளின் துணையுடன் பயனாளிகள் தீர்மானிக்கப்படுகிறார்கள். எனவே, இத்திட்டம் மறுசீரமைக்கப்படும். 600,000 புதிய பயனாளிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்கென 10,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

            கொழும்பை அழகுபடுத்தும் திட்டத்திற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு 
             > இலங்கை போக்குவரத்து சேவைக்கு 250 பஸ்களை வழங்க 1.5 பில்லியன் ரூபா நிதியொதுக்கீடு

             >  அருவக்காடு கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்கு 7000 மில்லியன் ஒதுக்கீடு.
             >கம்பெரலிய திட்டத்தின் கீழ் சமய வழிபாட்டுத்தளங்களை அபிவிருத்தி செய்ய 1 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 
             சூரிய மின்கலங்களுக்காக மேலதிகமாக 300,000 ரூபா வழங்கப்படும். மடு தேவாலய அபிவிருத்திக்கு 200 மில்லியன் ஒதுக்கீடு

              > கம்பெரலிய திட்டத்தின் கீழ் சமய வழிபாட்டுத்தளங்களை அபிவிருத்தி செய்ய 1 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 
              சூரிய மின்கலங்களுக்காக மேலதிகமாக 300,000 ரூபா வழங்கப்படும். மடு தேவாலய அபிவிருத்திக்கு 200 மில்லியன் ஒதுக்கீடு

              > வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு பனை நிதியம் ( palmyra fund ) புலம்பெயர் தமிழர்களை குறித்த நிதியத்திற்கு ஆதரவு வழங்க கோரிக்கை

              > சிகரெட்களுக்கு தேசிய கட்டுமான வரி விதிக்கப்படும். ஜூன் முதலாம் திகதி முதல் விலை 5 ரூபாவால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
              >கெசினோவுக்கான அனுமதிக் கட்டணம் 50 டொலர்
                >கடவுச்சீட்டு விநியோகத்திற்கான கட்டணம் ஒரு நாள் சேவை 5000 ரூபாவாலும் சாதரண சேவை 3500 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் 
                 >கசினோ உரிமம் 400 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்படும். 
                 >பீடி இலைகள் இறக்குமதிக்கான செஸ் வரி 3,500 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. 
                   Refresh To MORE> 
                   Share on Google Plus

                   About NEWS

                   This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
                    Blogger Comment
                    Facebook Comment