முஸ்லிம் பிரதேசங்களுக்கே வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு - வியாழேந்திரன் Mp


மட்டக்களப்பு தன்னாமுனை ஜோசப் கல்லூரியின் 144வது கல்லூரி தினம் திங்கட்கிழமை பாடசாலையில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு.எம்.பற்றிக் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், ஏறாவூர் பற்றுகோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.கே.பாலசுப்ரமணியம் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது பாடசாலைக்கு விரைவில் மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிப்பதாக வியாழேந்திரன் வாக்குறுதியளித்தார்.

நிகழ்வில் உரையாற்றய எஸ்.வியாழேந்திரன்-

“எமது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த நான்கு வருடத்தில் செய்த மிகப்பெரிய சாதனை என்னெவென்றால், அரசாங்கத்திற்கு விமர்சித்துவிட்டு வரவு செலவுத்திட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக முதலாவதாக கையைஉயர்த்துவது.

பிரதமரை விமர்சித்துவிட்டு பின் பிரதமரை பாதுகாக்க கையை உயர்த்துவது. அதுவும் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு இதை கடந்தகாலத்தில் செய்தவர்களில் நானும் ஒருவன். இந்த வருடம்தான் எமக்கு மனநிம்மதியாகவுள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளேன்.

வரவு செலவு திட்டத்தின் புத்தகத்தை எடுத்துப் பார்த்தால் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு 10வீதம் கூட இல்லை. வடமாணம் மற்றும் ஏனைய மாகாணங்களுக்கு ஒதுக்கியுள்ளவற்றில் கிழக்கு மாகணகத்தில் 10வீதத்தை ஒதுக்கியிருந்தாலும் சந்தோசமாக இருந்திருக்கும்.

கிழக்கிலே நகரத்திட்டமிடல் என்று ஆயிரக்கணக்கான மில்லின் ஒதுக்கப்பட்டுள்ளது. அது எந்த எந்த இடம் என்று பார்த்தால் சம்மாந்துறை, கல்முனை, வாழைச்சேனையை அண்மித்த பகுதி.

இதற்கு எங்களவர்கள் உடனே கையை உயர்த்தி அற்புதமான வரவு செலவுத்திட்டம் என கூறுகின்றனர். இதைப்போல ஒரு கேவலம்கெட்ட செயல் ஒன்றும் இல்லை. அரசாங்கத்தையும் அமைச்சர்களையும் விமர்சித்துவிட்டு சூடுசெறனை இல்லாமல் கையை உயர்த்துகின்றார்கள்.

அரசாங்கத்தை முஸ்லிம் அரசியல்வாதிகளும் கொண்டு வருகின்றனர் , மலையக அரசியல்வாதிகளும் கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் கையை உயர்திவிட்டு இருக்கவில்லை. அவர்கள் உடனே ஆளும் கட்சியிடன் சென்று பேசி தேவையான நிதிகளைக் கேட்டு எடுத்துக்கொள்கிறார்கள்.

மலையக அரசியல்வாதிகளைப் பாருங்கள். அமைச்சர்களான மனேகணேசன், பழனி திகாம்பரம், வடிவேல் சுரேஸ், இராதாகிருஸ்ணன் ஆகியோர் அதை செய்கிறார்கள். முஸ்லிம்களும் அரசியல்வாதிகளும் அதை செய்கிறார்கள். ஆனால் எங்களின் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர் அரசியல்வாதிகள் செய்யக்கூடிய ஒன்றையும் பெறவில்லை் என்றார்.
முஸ்லிம் பிரதேசங்களுக்கே வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு - வியாழேந்திரன் Mp முஸ்லிம் பிரதேசங்களுக்கே வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு - வியாழேந்திரன் Mp Reviewed by NEWS on March 21, 2019 Rating: 5