தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 139 பேர் அடையாளம்: ஜனாதிபதி

Ceylon Muslim
0 minute read
கடந்த 21 ஆம் திகதி நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக 139 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வ கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

நாடு முழுவதுக்குமான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாளை (26) முதல் பாதுகாப்பு அமைச்சில் கூட்டு பாதுகாப்பு நடவடிக்கை மத்திய நிலையமொன்று செயற்படவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். 
To Top