இதுவரை 7 பேர் கைது, தற்கொலை தாக்குதலும் கண்டுபிடிப்பு

இன்றைய வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 7 பேர் கைதாகி உள்ளதாக தெரிவிக்கப்படு கிறது. நீர் கொழும்பு, கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளில் தொடர்பு என சந்தேகத்தி லேயே 7 பேர் இதுவரை கைதாகி உள்ளனர்.

அதிகமான தாக்குதல்கள் தற்கொலை தாக்குதலாக இருக்கும் எனவும் ஒரு குழுவினரால் இது அனைத்தும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இராஜாங்க அமைச்சர் ருவன் வி​​ஜேவர்தன தெரிவித்தார்.
இதுவரை 7 பேர் கைது, தற்கொலை தாக்குதலும் கண்டுபிடிப்பு இதுவரை 7 பேர் கைது, தற்கொலை தாக்குதலும் கண்டுபிடிப்பு Reviewed by Ceylon Muslim on April 21, 2019 Rating: 5