தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்வது தொடர்பான தீர்மானம்....


கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக அதன் தரத்தை பேணும் வகையில், திறமையுடைய அதிபர்களும், அதிகாரிகளும் அரசியல் பேதங்கள் இன்றி நியமிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

கல்வி அமைச்சில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாற தெரிவித்துள்ளார். 

அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் தாம் அதிபர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதிபர்களை நியமிப்பதற்கான நடைமுறைமையும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ஆணைக்குழுவின் அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்வது தொடர்பான தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் போது கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையிலான முறைமையொன்று தயாரிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...