நான் இராஜினாமா செய்யவில்லை, தலைவருடன் முறுகலில்லை - நசீர் மறுப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நசீர், கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் பதவியிலிருந்து பதவி விலகியதாகவும், கட்சியின் தலைவர் ஹக்கீமுடன் முறுகல் உள்ளதால் இந்த பதவியை இராஜினாம செய்ததாக செய்தி வெளியாகியதைத்தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் நசீர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

தலைவருடன் எந்த கோபமும் எனக்கு இல்லை,  நான் அமைப்பாளர் பதவியிலிருந்தும் விலகவுமில்லை. ஊடகங்கள் பிழையான செய்தியை வெளியிடுவதாக அவர் சற்றுமுன் தெரிவித்துள்ளார். 

அத்துடன் உதுமாலெப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் இணைவதாக அறிந்தேன் அதை வரவேற்புடன்,   அவர் என்னூடாக அந்த கட்சிக்குள் இணைந்துகொள்ளுவதே சரி எனவும் தெரிவித்தார். 
நான் இராஜினாமா செய்யவில்லை, தலைவருடன் முறுகலில்லை - நசீர் மறுப்பு நான் இராஜினாமா செய்யவில்லை, தலைவருடன் முறுகலில்லை - நசீர் மறுப்பு Reviewed by NEWS on April 09, 2019 Rating: 5