ஜனாதிபதி ஆணைக்குழுவில் விஜேதாச ராஜபக்ஸ..

அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு, முன்னாள் அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ இன்று (10) அழைக்கப்பட்டுள்ளார்.முன்னாள் அமைச்சர் முன்வைத்த 2 முறைப்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

கல்வியமைச்சினால் சிறுவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட காப்புறுதி மற்றும் புலமைப்பரிசில் நிதியில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ சமீபத்தில் ஆணைக்குழுவில் முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் இன்று வாக்குமூலமளிக்கவுள்ளார்.

இதேவேளை, விவசாய அமைச்சிற்காக கட்டடமொன்றை வாடகைக்கு அமர்த்துவதற்காக அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பிலான விசாரணைக்காக அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் சஜித் விஜேமான்ன நேற்று (9) ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் 4 மணித்தியாலங்கள் வரை வாக்குமூலம் வழங்கியதாக, ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதி ஆணைக்குழுவில் விஜேதாச ராஜபக்ஸ.. ஜனாதிபதி ஆணைக்குழுவில் விஜேதாச ராஜபக்ஸ.. Reviewed by Ceylon Muslim on April 10, 2019 Rating: 5