ஹம்பாந்தோட்டை விபத்தில், பாலமுனையைச் சேர்ந்தவர் வபாத்

Ceylon Muslim
0 minute read
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற இவ்விபத்தில், பாலமுனையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மீன் வியாபாரி எம்.எஸ்.எம். லாபிர் என்ற 40 வயது நபரே மரணித்துள்ளார்.

இன்று, அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில், காத்தான்குடி – பாலமுனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீண்டகாலமாக மீன் வியாபாரத்தில் ஈடுபடும் இவர் மட்டக்களப்புப் பிரதேசத்திலிருந்து ஹம்பாந்தோட்டைக்கும் ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்புக்குமாக மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்தவரென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி குறித்த நபரின் சடலம், பிரேத பரிசோதனைகள் இடம்பெற்ற பின்னர், நல்லடக்கத்திற்காக காத்தான்குடிப் பிரதேசத்திற்கு எடுத்து வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஹம்பாந்தோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
To Top