எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லை !

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படாதென நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளுக்கேற்ப மாதாந்தம் 10ஆம் திகதி எரிபொருட்களின் புதிய விலைகள் நிர்ணயிக்கப்படும்.

அதன்படி மாதத்திற்கு ஒருமுறை அமுலாகும் எரிபொருள் விலையை சீர்த்திருத்தம் செய்வது குறித்து தீர்மானிக்கும் குழு இன்று (10) ஒன்றுக்கூடவுள்ளது.

கடந்த மாதம் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போது, புதுவருடத்தின் போது பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்க எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் இன்றைய எரிபொருள் விலை சீர்த்திருத்தின்போது எந்தவித விலை மாற்றங்களும் ஏற்படுத்தப்படமாட்டாது என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...