ஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தொழிற்சாலை உரிமையாளர் எனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரியப்படுத்தியுள்ளனர்.

கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 9 பேரும் இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் பொலிஸார் வழங்கிய அறிக்கையின் பிரகாரம் அவர்களை மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Share The News

Ceylon Muslim

Post A Comment: