ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாலியல் தொழில் எனும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம குற்றம் சுமத்தியுள்ளார்.

மாத்தளையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாலியல் தொழில் எனும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டால் நாம் அவருக்கு ஆதரவளிப்போம்.

காலையில் வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிப்போம் என்று கூறும் சுதந்திரக் கட்சி மாலையில் தப்பிச் சென்றுவிடுகின்றது. அக்கட்சி அழிந்து வருகின்றது.

அதேபோல் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சில சமயங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பின்னாலும் இன்னும் சில சமயங்களில் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பின்னாலும் செல்கின்றன. இதனாலேயே அக்கட்சியை பாலியல் தொழிலோடு ஒப்பிடுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாலியல் தொழில் எனும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாலியல் தொழில் எனும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. Reviewed by NEWS on April 08, 2019 Rating: 5