கொழும்பில் சற்றுமுன் பாரிய வெடிப்பு ; வேன் ஒன்றில் குண்டு வெடிப்பு

கொட்டஞ்சேனை கிருஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் சற்று முன்னர் மற்றுமொரு குண்டு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குண்டு செயலிழப்பு செய்யும் அணியினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர், தேவாலயத்திற்கு அருகில் இருந்த வேன் ஒன்றை சோதனையிடும் போது, குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...