வெலே சுதாவுக்கு மரண தண்டனை உறுதி...!

ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த குற்றத்துக்காக, வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பொள விதானகே சமந்த குமார என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்றைய தினம் (05)​ உறுதி செய்தது.

ஏற்கெனவே தனக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனைக்கு எதிராக, வெலே சுதாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தீபாலி விஜேசுந்தர, அச்சல வென்கப்புலி ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாமால் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...