கோட்டாபயவுக்கு அமெரிக்க நீதிமன்ற அறிவித்தல்கள் கையளிப்பு! புகைப்படத்தை அமெரிக்க தனியார் புலனாய்வாளர்கள் வெளியிட்டனர்


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள் தொடர்பான நீதிமன்ற அறிவித்தல்கள் (நோட்டீஸ்) கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படுவதாக கூறப்படும் புகைப்படமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அ மெரிக்காவிலுள்ள தனியார் புலனாய்வு அமைப்பான ப்றீமியர் குறூப் இண்டர்நெஷனல் (PGI) எனும் அமைப்பினால் கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்த அறிவித்தல்கள் கையளிக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக அவரின் மகள் அஹிம்சா விக்கிரதுங்கினாலும் சித்திரவதையினால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் புலம்பெயர்ந்த தமிழர் ஒருவரினாலும் இவ்வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அமெரிக்க நீதிமன்ற அறிவித்தல் கையளிக்கப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு மறுப்பு வெளியாகியிருந்த நிலையில் இப்புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...