கொழும்பைத் தாண்டி நாட்டின் ஏனைய பாகங்களையும் உள்ளடக்கியவாறு Caboo டக்ஸி சேவை ஆரம்பமாகவுள்ளது..


கொழும்பைத் தாண்டி நாட்டின் ஏனைய பாகங்களையும் உள்ளடக்கியவாறு Caboo டக்ஸி  சேவை ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பில் அந்நிறுவனத்தின் முகாமைத்துவ நிறைவேற்றதிகாரி ரொஷான் ஹாசிம் குறிப்பிடுகையில்,

நாட்டில் தற்போது சேவை வழங்குகின்ற டக்ஸி  வாகன சேவைகள் கொழும்பு நகரினை மாத்திரம் வரையறுத்து காணப்படுகின்றன. ஆனால் இப்பிரச்சினைக்கான தீர்வை நாம் பெற்றுக்கொடுக்கவுள்ளோம்.

தொலைபேசியில் Caboo செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து  இச்சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

வாடிக்கையாளர்களுடன் சேவை கட்டணத்தை உறுதிப்படுத்தியவுடன் சேவை வழங்கப்படும். ஏனைய  சேவை நிறுவனங்களை காட்டிலும் குறைவான கட்டணமே அறவிடப்படவுள்ளது. பொதுவாக டக்ஸி சேவையினை பயன்படுத்துகின்ற வாடிக்கையாளர்களுக்கு ஒரே கட்டணம் அறவிடும் முறைமை காணப்படுவதில்லை.

நேரத்திற்கு நேரம் சேவை கட்டணங்கள் மாற்றமடையும். ஆனால் சேவையில் எந்நேரத்திலும் ஒரே கட்டணமே அறவிடப்படும் அனைத்து பிரதேசங்களிலும் இந்த சேவை வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் பெறும் சேவையைப் போன்று காலி, அம்பாறை ஆகிய பிரதேசங்களிலும் ஒரே கட்டண அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும்.

Caboo டக்ஸி சேவையினை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அல்லது மகிழ்விப்பு பணத் தொகை வழங்குவதற்கான முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...