பொத்துவிலில் மூன்று பாகிஸ்தான் பிரஜைகள் கைது #EasterSundayAttacksSL

பொத்துவில் பகுதியில் சட்ட விரோதமான முறையில் இந்நாட்டில் தங்கியிருந்த மூன்று பாகிஸ்தான் பிரஜைகள் கைது. 

பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் அருகம்பே முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சந்தேகநபர்களான பாகிஸ்தான் நாட்டவர்களிடம் அனுமதிக்கப்பட்ட வீசா அல்லது கடவுச்சீட்டு இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள சந்தேக நபர்களை பொத்துவில் விமான நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...