இலங்கையில் இருந்த, 600 வெளிநாட்டு முஸ்லிம் பிரச்சாரர்கள் வெளியேற்றப்பட்டனர்!

இலங்கையில் மார்க்கப் பிரச்சார நடவடிக்கைகள் மற்றும் இதர சமய விவகாரங்கள் நிமித்தம் தங்கியிருந்த 600 வெளிநாட்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலையடுத்து அரசாங்கம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அங்கமாகவே இவ்வெளியேற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் பிரச்சாரகர்களே கடும்போக்குவாதத்தை போதிப்பதாக அரச தரப்பில் விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இருந்த, 600 வெளிநாட்டு முஸ்லிம் பிரச்சாரர்கள் வெளியேற்றப்பட்டனர்! இலங்கையில் இருந்த, 600 வெளிநாட்டு முஸ்லிம் பிரச்சாரர்கள் வெளியேற்றப்பட்டனர்! Reviewed by Ceylon Muslim on May 06, 2019 Rating: 5