சக்தியை புறக்கணித்த , மெளலவிமார்களுக்கு நன்றிகள்!

சக்தி ஊடகத்தை விட முகநூல் சமூக வலைத்தள ஊடகம் வலிமை வாய்ந்தது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது

எமது முஸ்லிம் சமூக இளைஞர்களால் முகநூல்களில் சக்தி ஊடகத்துக்கு எதிராக அழுத்தங்களை தெரிவிப்பதால் எமது மதிப்புக்குரிய மௌலவிகள் யாரும் செல்லக்கூடாது, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று இளைஞர்களின் அழுத்தத்தினால் இன்று -11- சக்தி தொலைக்காட்சியில் இப்தார் நேரத்தில் எந்த மௌலவி மார்களும் கலந்து கொள்ளாத காரணத்தினால் எந்தவித நிகழ்ச்சிகளையும் அவர்களால் நடத்த முடியாமல் போனது.

அதுமட்டுமில்லாமல் அதான் மட்டும் ஒலிக்கப்பட்டது. இது எமக்கு கிடைத்த மாபெரும் முதலாவது வெற்றியாகும். அல்ஹம்துலில்லாஹ்

இதுபோன்று எதிர்காலத்தில் விசேடமாக கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற புடவை கடை வியாபாரிகள், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் காணப்படும் வியாபாரிகள் தயவுசெய்து உங்களுடைய வியாபார நிலைய விளம்பரங்களை இந்த ஊடகத்தின் ஊடாக விளம்பரப்படுத்த கூடாது என்று நாங்கள் பணிவாக கேட்டுக்கொள்கிறோம்.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின் போது மகாராஜ நிறுவனத்தின் செய்தி நிருவனம் மேற்கொண்ட நடவடிக்கைகள் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை கடைபிடித்தது. இதனை கட்சிகள் சார்பின்றி முழு இலங்கை முஸ்லிம் இளைஞர்களாலும் புறக்கணிக்கப்பட்டு சக்தி ஊடகத்திற்கு எடுத்துக்கூறியும் கணக்கில் எடுக்கவில்லை.

 அது போல் பிரதேசங்களில் நடைபெறும் இப்தார் நிகழ்வுகளும் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இச்சம்பவங்கள் சக்தி நிறுவனத்திற்கு பெரும் அடியாகவே இருந்தது. 

எங்கள் கோரிக்கையும் ஊடக சுதந்திரம்தான்

தெரிவிப்பது நாங்கள் 
தீர்மானிப்பது நீங்கள்

Tx anvar deen- jafnamuslim
சக்தியை புறக்கணித்த , மெளலவிமார்களுக்கு நன்றிகள்! சக்தியை புறக்கணித்த , மெளலவிமார்களுக்கு நன்றிகள்! Reviewed by Ceylon Muslim on May 12, 2019 Rating: 5