தாக்குதல் சம்பவமொன்று நடைபெறப்போவதாக முகநூலில் வந்த செய்தி ஒன்றையடுத்து அதன் உண்மைத்தன்மையை கூறுமாறு கோரி சிலாபத்தில் இன்று காலை நடந்த ஆர்ப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பொலிஸ் நிலையம் அருகே வந்த இளைஞர் குழு இந்த செய்திகளின் உண்மைத்தன்மையை கூறுமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து கடைகள் அனைத்தும் நகரத்தில் மூடப்பட்டன.
ஆர்ப்பாட்டக்காரர்களை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கலைத்த இராணுவம் அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தது.
இதனையடுத்து சிலாபம் பொலிஸ் பிரிவில் இப்போது முதல் நாளை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது
பின் தகவல்,
சிறுபான்மை வர்த்தகர் ஒருவர் முகநூல் பதிவொன்றின் கீழ் இட்ட கொமன்ஸ் காரணமாக இந்த பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இன,மத ரீதியான கருத்துக்களை பதிவிடுவதை, செயார் செய்வதை தவிர்ந்து கொள்ளுங்கள்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை மேலும் எண்ணை ஊற்றி எரிய வைக்காதீர்கள்.
தமிழன்