பாடகர் மதுமாதவ அரவிந் குழுவினர் பயணித்த வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது..!அண்மையில் மினுவாங்கொட பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபரின் வாகனத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பாடகர் மதுமாதவ அரவிந்த உட்பட குழுவினர் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் வாகனத்தையே பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கிரில்லவல பிரதேசத்தில் குறித்த வாகனத்தை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

HJ 4747 என்ற இலக்கத்தை கொண்ட வாகனமே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாகனத்தின் உரிமையாளர் அந்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...