ரிசாத் பதியுதீனுக்கு எதிராக எந்த முறைப்பாடும் இல்லை - மஹிந்த அமரவீர

தற்சமயம் வெளிநாடு சென்றுள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன் அர்ஜுன் மகேந்திரன் போன்று தப்பியோடிவிடக் கூடும் என பெருமளவு பிரச்சாரங்கள் இடம்பெற்று வரும் நிலையில், ரிசாத் பதியுதீன் அரச உத்தியோகபூர்வ விஜயம் நிமித்தமே வெளிநாடு சென்று நாடு திரும்பிவிட்டதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ரிசாத் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடுகள் எதுவும் இல்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், பொலிசில் முறைப்பாடு இருப்பின் அமைச்சர் என்பதற்காக தப்ப முடியாது எனவும் அவரையும் கைது செய்து பொலிசார் விசாரணை நடாத்துவர் எனவும் அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
 
ரிசாத் பதியுதீனுக்கு எதிராக எந்த முறைப்பாடும் இல்லை - மஹிந்த அமரவீர ரிசாத் பதியுதீனுக்கு எதிராக எந்த முறைப்பாடும் இல்லை - மஹிந்த அமரவீர Reviewed by NEWS on May 07, 2019 Rating: 5