எனது பிள்ளைகள் இப்படி செய்வார்கள் என நினைக்கவே இல்லை: தற்கொலையாரியின் வாப்பா

தமது புதல்வர்கள் இருவரும் இவ்வாறான நாசகார செயலில் ஈடுபடுவார்கள் என நினைத்தும் பார்க்கவில்லையென விசாரணையின் போது தெரிவித்துள்ளார் தெமட்டகொட வர்த்தகர் இப்ராஹிம்.

இவரது இரு புதல்வர்கள் நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலைத் தாக்குதல்களை நடாத்தியிருந்த அதேவேளை மருமகளும் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது. தெமட்டகொட மாவில கார்டன்சில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மூன்று புலனாய்வுத்துறை அதிகாரிகள் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில் கைதான குறித்த நபர் தற்போது விசாரணைக்குட்படுத்தப்படுகின்ற அதேவேளை, பெருமளவு சொத்து சுகம் இருந்த தமது புதல்வர்கள் இப்படியான ஒரு பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள் என தான் நினைத்தும் பார்க்கவில்லையெனவும் அவ்வப்போது சில சந்தேகத்துக்குரிய பேச்சுக்கள் பேசப்பட்டபோது தாம் எச்சரித்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனது பிள்ளைகள் இப்படி செய்வார்கள் என நினைக்கவே இல்லை: தற்கொலையாரியின் வாப்பா எனது பிள்ளைகள் இப்படி செய்வார்கள் என நினைக்கவே இல்லை: தற்கொலையாரியின் வாப்பா Reviewed by NEWS on May 03, 2019 Rating: 5