வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது...!கரந்தெனிய பொலிஸ் பிரிவில் வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கரந்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, கிரிவத்த, கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபருக்கு எதிராக வெவ்வேறு நீதிமன்றங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் இன்று பலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், கரந்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது...! வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது...! Reviewed by NEWS on May 09, 2019 Rating: 5