சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்ட கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை...!

NEWS
0 minute read


ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னர், சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வௌியிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அது தொடர்பில் விசாரணை செய்யும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் வெளியிட்ட 360க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, குறித்த குழுவி​னரை மேற்கோள்காட்டி ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அவற்றில் பெரும்பாலனவை, தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களுடையது என்பதும் தெரியவந்துள்ளது.

சமூக வலைத்தளங்களூடாக தவறான பிரசாரங்களை பரப்புவோரைக் கண்டறிவதற்கு 24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான கணக்குகளை முடக்குவதுடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
To Top